இலங்கையின் பிரபல பாதாள உலகக் குழு தலைவனாக கருதப்படும் அங்கொட லொக்கா இந்தியாவில் உயிரிழந்துள்ளதாக தமிழ்நாட்டின் கோவை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள்  செய்தி வெளியிட்டுள்ளன.

அங்கொட லொக்கா கடந்த ஜூலை 3 ஆம் திகதி மதுரையில் உயிரிழந்ததன் பின்னர், அவரது அடையாளங்களை மாற்றி போலி ஆவணங்கள் ஊடாக மோசடி செய்து அவரை மதுரை தகனம் செய்த குற்றச்சாட்டில் இலங்கையர்கள் உட்பட ஆண் ஒருவரும், பெண்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டுவந்த அங்கொட லொக்கா சுமார் இரண்டு வருடங்களாக தமிழ்நாட்டில் தலைமறைவாகி இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

Share.
Leave A Reply