அங்கொட லொக்கா இந்தியாவின் கோவையில் மர்மமாக உயிரிழந்த சம்பவத்தில், கோவை பொலிஸார் முறையான விசாரணை மேற்கொள்ளவில்லையென்ற சர்ச்சை கிளம்பியுள்ளது.

இலங்கையில் போதைப்பொருள் கடத்தும், பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவர், 36 வயதுடைய அங்கொட லொக்கா.

கடந்த, 2017 ஆம் ஆண்டில் மற்றுமொரு கடத்தல் கும்பலைச் சேர்ந்த, ஏழு பேரை சுட்டுக்கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த அங்கொட லொக்கா,  இலங்கையிலிருந்து தப்பி இந்தியாவின் சென்னையில் மறைந்திருந்தார்.

 

இரு வேறு வழக்குகளில், சென்னை பொலிஸார், அங்கொடை லொக்காவை கைது செய்தனர். பின்னர் அவர் பிணையில் விடுதலையாகி பெங்களூர தப்பிச்சென்றுள்ளரார்.

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 3 ஆம் திகதி அங்கொட லொக்கா பெங்களூரில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து, கோவை பொலிஸ் தரப்பு தெரிவிக்கையில்,

பொலிஸார் தன்னை நெருங்குவதை அறிந்த அங்கொட லொக்கா, 2018 இல் கோவை வந்தார். சேரன் மாநகரில், இவருடன், இலங்கையைச் சேர்ந்த 27 வயதுடைய அம்மானி தான்ஜி என்ற பெண்ணும் தங்கினார்.

இந்நிலையில், அம்மானி தான்ஜியின் கணவரை ஏற்கனவே கொலை செய்த, அங்கொட லொக்கா குறத்த பெண்ணுடன் வாழ்ந்து வந்தார்.

முன்னதாக, அங்கொட லொக்காவுக்கு, மதுரை நீதிவானானா 36 வயதுடைய சிவகாமி சுந்தரி என்பவர் தனது வீட்டில் மூன்று மாதம் அடைக்கலம் கொடுத்துள்ளார்.

சிவகாமி சுந்தரியின் நண்பரான 32 வயதுடைய திருப்பூரைச் சேர்ந்த தியானேஸ்வரன் என்பவர், அங்கொட லொக்கா மற்றும் அம்மானி தான்ஜிக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளார்.

அங்கொட லொக்கா, தன் குடியுரிமையை மறைத்து பிரதீப்சிங் என்ற பெயரில், திருப்பூர் முகவரியில் போலி ஆதார் அடையாள அட்டை எடுக்க இவர் உதவியுள்ளார்.

இதையடுத்து, அங்கொட லொக்கா, கோவையில் பிரதீப்சிங்காக உலா வந்தார். இந்நிலையில், கடந்த ஜூலை, 4 ஆம் திகதி  அங்கொட லொக்கா மர்மமான முறையில் இறந்தார்.

அம்மானி தான்ஜி, சிவகாமி சுந்தரிக்கு தகவல் தெரிவித்துள்ளார். கோவை வந்த சிவகாமி சுந்தரி, உயிரிழந்தவர் தன் பெரியப்பா மகன் என, பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரும் அவர் வழங்கிய, போலி ஆதார் அட்டையை வைத்து வழக்கு பதிவு செய்தனர். பிரேத பரிசோதனைக்கு பின், சடலத்தை மதுரைக்கு எடுத்துச் சென்று எரித்துள்ளனர். இவ்வாறு, பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது, இவ்வழக்கில், அம்மானி தான்ஜி, சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் ஆகிய மூவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில், வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி தெரிவித்த தகவல்களை, முறையாக விசாரிக்காமல், பொலிஸார் அலட்சியமாக செயல்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

மேலும், அங்கொட லொக்காவை கொலை செய்ய, அவரது எதிராளிகள் பலர் திட்டமிட்டனர். எதிராளிகளில் சிலர் சிறையிலும், வெளிநாடுகளிலும் தங்கியிருந்தனர்.

அவர்கள், பெண் ஒருவர் மூலம் அங்கொட லொக்காவை விஷம் கொடுத்து கொலை செய்ததாக, இலங்கையில் செய்தி வெளியாகின.

ஆனால், அவர் கோவையில் மாரடைப்பால் உயிரிழந்ததாக, தற்போது தெரிவிக்கப்படுகிறது. அங்கொட லொக்கா மரணத்தில் பல்வேறு மர்மங்கள் நிறைந்துள்ளன.

இதையடுத்து, இந்திய பொலிஸார் பிரேத பரிசோதனையின் ஒரு பகுதியான இரசாயன சோதனை அறிக்கைக்காக காத்திருக்கின்றனர்.

சி.பி.சி.ஐ.டி.,சர்வதேச அளவில், இவ்வழக்கு செல்வதால் வழக்கை, சி.பி.சி.ஐ.டி., க்கு மாற்றி, டி.ஜி.பி., திரிபாதி நேற்று மாலை உத்தரவிட்டார்.

சி.பி.சி.ஐ.டி., – ஐ.ஜி., சங்கர் மற்றும் அதிகாரிகள், வழக்கு குறித்த தகவல்களை கோவை மாநகர பொலிசாரிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

அங்கொட லொக்கா மரணம் குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட அம்மானி தான்ஜி, சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் மூவரையும் சிறையில் அடைப்பதற்காக, நீதிமன்றத்துக்கு பொலிஸார் அழைத்து சென்றனர்.

கர்ப்பமாக இருந்த அம்மானி தான்ஜிக்கு, திடீர் வயிற்று வலி ஏற்பட்டது. அவர், கோவை அரச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவருக்கு கர்ப்பம் கலைந்தது.

அங்கு, அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற இருவரும், சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

Share.
Leave A Reply