இந்தியாவின் ஜோத்பூரிலுள்ள சைவ உணவகம் ஒன்று ‘கொவிட் கறி’ மற்றும் ‘மாஸ்க் நாண்’ ஆகிய புதிய உணவுகளை அறிமுகம் செய்துள்ளது.

 

கொரோனா வைரஸ் பரவலால் உணவகங்களில் சாப்பிடுவது குறித்து வாடிக்கையாளர் மத்தியில் ஏற்பட்டுள்ள பயத்தை போக்கும் நோக்குடன் இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இந்த உணவு விடுதி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது எமக்கும், எமது மொத்த துறையினருக்கும் மிகவும் இக்கட்டானதொரு தருணம் என வேதிக் மல்டி குஷின் ரெஸ்டோரென்ட்  சைவ உணவகத்தின் உரிமையாளர் யாஷ் சொலாங்கி தெரிவித்துள்ளார்.

பொரித்த காய்கறி உருண்டைகள் கொரோனா வைரஸின் உருவத்தைபோல வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், அதனுடன் உண்ணக்கூடிய நாண் ரொட்டிகள் முகக்கவசம் (மாஸ்க்) போல வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த கொவிட் கறியில் மேலதிகமாக இந்திய மூலிகைகளும் பலசரக்கு பொருட்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இவை மனித உடலாரோக்கியத்துக்கு சிறத்தவை என சொலாங்கி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அண்மையில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள போதிலும் மக்கள் மத்தியில் இன்னும் பயம் இருக்கிறது. இன்னமும் வெளியில் சாப்பிடுவதற்கு அவர்கள் தயக்கம் காட்டுகின்றன என சொலாங்கி மேலும் தெரிவித்தார்.

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை, 18 இலட்சத்தை தாண்டியுள்ளதுடன், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆயிரத்தை கடந்துள்ளது.

 

Share.
Leave A Reply