துபாயில் இருந்து 191 பயணிகளுடன் இந்தியா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் (வெள்ளிக்கிழமை) இன்று மாலை கேரளாவின் கோழிக்கோட்டில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று இரண்டாக உடைந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

 

கோழிக்கோட்டில் உள்ள கரிபூர் விமான நிலையத்தில்  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கி ஓடுபாதையை கடந்து பயணித்து பின்னர், 25 அடி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து  இரண்டு துண்டுகளாக உடைந்துள்ளது.

இன்று இரவு 7:38 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விமானத்தில் 10 குழந்தைகள் உள்ளிட்ட 184 பயணிகள், இரண்டு விமானிகள், 6 பணியாளர்கள்  உட்பட 191 பேர் பயணித்துள்ளனர்.

இதுவரை வெளியான தகவலின் படி  விமானி ஒருவர் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளதுடன்  40 பயணிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Share.
Leave A Reply