தொம்பே பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும், மகளும் உயிரிழந்தனர்.
நேற்று (10) இரவு இந்த விபத்து நேர்ந்தது. மோட்டார் சைக்கிளில் வந்த தாயையும், மகளையும் கார் மோதி தள்ளியது. இதில் காயமடைந்த தாயும், மகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.
42 வயது தாயும், 19 வயது மகளுமே உயிரிழந்தனர்.
கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

