உலகளவில் கடந்த 24 மணி நேரத்தில் 294,000 க்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒருநாளில் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளின் அதிகூடிய எண்ணிக்கை இது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலகளவில் 21 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது என்று ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மேலும் உலகளாவிய ரீதியில் இதுவரை 7 இலட்சத்து 71 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர்.

உலகளாவிய ரீதியிலான இறப்பு எண்ணிக்கையில் அமெரிக்காவில் மட்டும் கிட்டத்தட்ட 170,000 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply