ஐம்பதாயிரம் பட்டதாரிகளுக்கும், குறைந்த வருமானம் கொண்ட 100, 000 குடுமங்களைச் சேர்ந்தவர்களுக்கும் அரச தொழில்வாய்ப்பு வழங்கும் செயற்றிட்டம் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்திருந்தது.
இந்நிலையில், இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள பட்டதாரிகளின் விபரங்கள் இன்று (17 வெளியிடப்பட்டுள்ளன.
தெரிவுசெய்யப்பட்டுள்ளவர்களின் பெயர், விபரங்களை அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் www.pubad.gov.lk என்ற வலைத்தளத்தில் மாவட்ட வாரியாக பார்வையிட முடியும்.

