கொரோனாவில் இருந்து குணம் அடைந்ததால் குடும்பத்துடன் ஆஸ்பத்திரியில் உற்சாக ஆட்டம் போட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது
போபால்:
கொரோனா வைரஸ் தொற்று என்று பரிசோதனை முடிவு வந்து விட்டால் எப்படிப்பட்ட திட மனம் கொண்டவர்களும் சிறிது நேரம் ஆடித்தான் போகிறார்கள். அந்தளவுக்கு கொரோனா, மனித குலத்தை கதி கலங்க வைத்து வருகிறது.
அதே நேரத்தில் சிகிச்சைக்கு பின்னர் வைரஸ் தொற்றில் இருந்து குணம் அடைகிறபோது, அது அவர்களுக்கு உற்சாக கொண்டாட்டமாக மாறி விடுகிறது.
அப்படித்தான் ஒரு சம்பவம், மத்திய பிரதேச மாநிலத்தில் அரங்கேறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அங்கு கொரோனா வைரஸ் தொற்று பாதித்து ஒரே குடும்பத்தினர் 19 பேர், கட்னி மாவட்ட ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் கடந்த 8-ந் தேதி அனுமதிக்கப்பட்டார்கள்.
தொடர் சிகிச்சையால் அவர்கள் அனைவரும் சுதந்திர தினத்தன்று (15-ந் தேதி) குணம் அடைந்தனர்.
அவர்களுக்கு தொற்று இல்லை என மறுபரிசோதனையில் தெரிய வந்தது. இதனால் அவர்கள் ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இது அவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் ஒரு சேர தந்தது. அது மட்டுமல்ல, கொண்டாட்டத்துக்கும் வழிவகுத்தது.
சமீபத்தில் சர்ச்சைக்கு இடமான வகையில் மரணம் அடைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், ஷ்ரத்தா கபூர் மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த ‘சிச்சோர்’ என்ற இந்திப்படத்தில் வரும் “சிந்தா கார்கே க்யா பேயேகா, மார்னே சே பெஹ்லே மார் ஜெயேகா” என்ற பாடலை பெண்கள், குழந்தைகள் என அந்த குடும்ப உறுப்பினர்கள் சிலர் ஆஸ்பத்திரியில் வைத்தே உற்சாக மிகுதியில் பாடி துள்ளல் ஆட்டம் போட்டனர்.
இது அந்த வார்டையே கலகலப்பாக மாற்றியது. இதை அங்கிருந்த சிலர் செல்போனில் படம் பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிட அது வைரலாக பரவியது.
இதுபற்றி அந்த குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறும்போது, “ கொரோனா என்றதும் ஆரம்பத்தில் நாங்கள் எல்லோரும் பயந்து விட்டோம்.
Eight strong family celebrates successfully defeating killer COVID-19 infection by dancing to tunes of a Bollywood song, before being discharged from Katni district hospital in MP.@NewIndianXpress @TheMornStandard pic.twitter.com/9b4Mzst6MQ
— Anuraag Singh (@anuraag_niebpl) August 18, 2020