மணலுடன் சென்ற உழவு இயந்திரத்தின் மக்காட் பகுதியில் இருந்து பயணித்த குடும்பத்தலைவர் ஒருவர் தவறி வீழ்ந்து சில்லுக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், சங்கானை விழிசிட்டியில் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சங்கானை வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அத்துடன், மணல் ஏற்றிவந்த உழவு இயந்திரம் வீதியைவிட்டு விலகி மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.