முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் வீதியால் சென்ற பெண்ணை அழைத்து இராணுவச் சிப்பாய் ஒருவர் தவறாக நடந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு சிறிது பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் மக்கள் குடியிருப்பை அண்டிய பகுதியில் உள்ள இராணுவ முகாமில் இருந்த குறித்த இராணுவ சிப்பாய் ஒருவர் மர்ம உறுப்பை காட்டி தவறாக நடந்துகொண்டதாக குறித்த பெண் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அப்பகுதி மக்கள் இணைந்து குறித்த இராணுவ முகாமுக்கு முன்பாக ஒன்றுகூடியுள்ள நிலையில் அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ஆண்டிஐயா புவனேஸ்வரன் சம்பவ இடத்துக்குச் சென்று மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதியுமாறு சம்பவ இடத்திற்குச் சென்ற புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்த நிலையில் குறித்த யுவதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யச்சென்றுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.