ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 6 இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், பொம்மைவெளி பகுதியைச் சேர்ந்த இளைஞர்களே இன்று (ஞாயிற்றுக்கிழமை) இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து 60 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கைதுசெய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் விசாரணை முன்னெடுத்து வருவதுடன் குறித்த ஐவரையும் யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply