திருகோணமலை, சம்பூரில் 17 வயதுடைய பெண் ஒருவரை அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 2 பிள்ளைகளின் தந்தை ஒருவரை அடுத்த செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் இன்று (24) உத்தரவிட்டார்.
சீதனவெளி, சேனையூர் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் தனது வீட்டுக்கு அயல் வீட்டில் வசித்து வந்த 17 வயதுடைய பெண் ஒருவரை காதலித்து வந்துள்ள நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும், பெற்றோர்களுக்கு தெரியாமல் சம்பூர், சூரநகர் பகுதியில் உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த நிலையில், சந்தேக நபரின் மனைவி சம்பூர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய நேற்று (23) குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சதேக நபரை மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே, விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டப்பட்டுள்ளார்.
17 வயதுடைய பெண் மருத்துவ பரிசோதனைக்காக மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.