ஹரியானா மாநிலம்- சோனிபேட் பகுதியில் 82 வயதான மூதாட்டியை அவரது மருமகள் கொடூரமாக தாக்கும் காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த மூதாட்டி தள்ளாமை காரணமாக, வீட்டு வேலை எதனையும் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு வீட்டு வேலைகள் எதனையும் செய்யாமல் இருக்கின்றமையினால், ஆத்திரம் அடைந்த மருமகள் அவரை சரமாரியாக தாக்கி உள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான காணொளி, சமூகவலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த காணொளி தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, மூதாட்டியை தாக்கிய பெண்ணிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.