கொரோனா வைரஸ் “ஏதாவதொரு வடிவத்தில் எப்போதும்” உலகில் தொடர்ந்து இருக்கும் என்று பிரிட்டன் அரசின் அவசரநிலைகளுக்கான அறிவியல் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் (Sage) தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட கால இடைவெளியில் மக்கள் தடுப்பு மருந்தை செலுத்திக்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் என்று சர் மார்க் வால்போர்ட் தெரிவித்துள்ளார்.

1918ஆம் ஆண்டு ஏற்பட்ட ஸ்பானிஷ் ஃப்ளு மறைய இரண்டாண்டுகள் ஆனதை போன்று கொரோனா வைரஸும் இரண்டாண்டுகளில் மறைந்து போகலாம் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியேசஸ் நேற்று முன்தினம் நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையில், இந்த கருத்து வெளிவந்துள்ளது.

Share.
Leave A Reply