இந்தியாவின் டெல்லியில், 52 வயதான ஒரு பெண் ஒருவருக்கு  உலகின் மிகப்பெரிய கருப்பைக் கட்டியை  வெற்றிகரமாக அகற்றி மருத்துவர்கள் சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

 

இந்தியாவின் டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்பல்லோ வைத்தியசாலையில் வைத்தியர்கள் மேற்கொண்ட  அறுவை சிகிச்சையை அடுத்து குறித்த பெண்ணின் கட்டி அகற்றப்பட்டுள்ளது..

குறித்த பெண்ணின் கருப்பையில் ஒரு மாபெரும் கட்டி வளர்ந்து வருவதாகவும், அவரின் மொத்த உடல் எடையில் 45 சதவீதத்திற்கு அந்த கட்டி காரணம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஒரு கட்டத்தில் கட்டியின் இராட்சத வளர்ச்சி காரணமாக அப் பெண் எழுந்து நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. மற்றும் கட்டி வெடிக்கும் அபாயத்தையும் எட்டியது.

இதனையடுத்து  180 நிமிடங்களுக்கு மேல் அறுவை சிகிச்சையை மேற்கொண்ட வைத்தியர்கள்  அந்த பெண்ணின்  கருப்பைக் கட்டியை  அகற்றியுள்ளனர்.

இது ஒரு அதிசயம் என அறுவை சிகிச்சை மேற்ககொண்ட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply