240 கோடி இந்திய ரூபா இன்சூரன்ஸ் பணத்திற்காக நடிகை ஸ்ரீதேவி  கொலை செய்யப்பட்டார் எனவும அவரின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை எனவும  ரசிகர்கள்  சிலர் தற்போது தெரிவித்துள்ளனர்.

 

பிரபல நடிகை ஸ்ரீதேவி தனது உறவினர்; மகன் மோஹித் மர்வாவின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கடந்த 2018ம் ஆண்டு துபாய் சென்றார்.

துபாயில் ஹோட்டல் அறையில் இருந்த குளியல் தொட்டி நீரில் மூழ்கி ஸ்ரீதேவி இறந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டது.

ஸ்ரீதேவி போன்று உயரமான ஆள் எப்படி குளியல் தொட்டி நீரில் மூழ்கி இறக்க முடியும். இது இயற்கை மரணம் அல்ல மாறாக திட்டமிட்ட கொலை என்று அப்பொழுது பேச்சு எழுந்து அடங்கியது.

இந்நிலையில் ஸ்ரீதேவியின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ரசிகர்கள் தற்போது கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

240 கோடி ரூபா இன்சூரன்ஸ் பணத்திற்கு ஆசைப்பட்டு தான் ஸ்ரீதேவியை துபாயில் வைத்து கொலை செய்து விட்டார்கள்.

ஸ்ரீதேவி இறந்த பிறகு அவரின் குடும்பத்தார் காசை தண்ணீராக செலவு செய்கிறார்கள். பணத்திற்காக ஸ்ரீதேவியை திட்டமிட்டு கொலை செய்துவிட்டனர்.

இதை சிபிஐ விசாரணை நடத்தி உண்மையை உலகிற்கு தெரிவிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரபல பொலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் மாதம் 14ஆம் திகதி மும்பை பந்த்ரா பகுதியில் இருக்கும் தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சுஷாந்தின் மரணம் தற்கொலை அல்ல கொலை என்றும், இது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார்கள்.

இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இதை பார்த்து தான் ஸ்ரீதேவியின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை என்று அவரின் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

Share.
Leave A Reply