வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் கோமா நிலையில் இருப்பதாக கூறப்படுவதால் அவரது சகோதரி கிம் யோ ஜோங் உள்நாட்டு மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான கட்டுப்பாடுகளை கையாளுவார் என மறைந்த தென்கொரிய ஜனாதிபதி கிம் டே ஜுங்கின் முன்னாள் செலாளர் ஒருவரை மேற்கோள்காட்டி சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

கிம் டே ஜுங்கின் அரசியல் விவகார செயலாளராகவும், மாநில விவகார கண்காணிப்பு அலுவலகத்தின் பிரதானியாகவும் செயற்பட்ட சங் சொங் -மின் சமூகஊடக பதிவொன்றில், ஆட்சியை தொடர்ந்தும் நடத்த முடியாதவாறான கடும் சுகயீனம் அல்லது சதி மூலம் ஆட்சி நீக்கம் செய்யப்பட்டாலேயே அன்றி, வட கொரிய தலைவர் ஒருவர் தனது அதிகாரங்களை வேறொருவரிடம் ஒப்படைக்கமாட்டார்.

அவர் (கிம் ஜோங் உன்) கோமாவில் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். எனினும், அவரது வாழ்க்கை முடியவில்லை என அவர் கூறியதாக ‘த கொரியன் ஹெரால்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.

முழுமையான அடுத்தடுத்த கட்டமைப்பு அமைக்கப்படவில்லை எனவே, நீண்ட காலத்துக்கு வெற்றிடத்தை பேண முடியாத நிலையில்,  கிம் ஜோங் முன்கொண்டுவரப்படுகிறார்.

கிம் ஜோங் உன் முழவதுமாக உணர்விழந்துள்ளதாக சீன வட்டாரம்  ஒன்றில் இருந்து தகவல்களை பெற்றதாக சங் கூறுகிறார்.

வட கொரிய தலைவரின் உடல்நலக்குறைவு தொடர்பான ஊகங்களுக்கு மத்தியில் சில மாதங்களாக பகிரங்கமாக அவர் தோன்றாத நிலையில் இவ்வாறு சாங்கின் கருத்துகள் வெளிவந்துள்ளன.

கிம் ஜோங்  உன் இறுதியாக கடந்த ஏப்ரல் 11 ஆம்திகதி நடந்த தொழிலாளர் கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டார்.

தென்கொரிய ஜனாதிபதி  மூன் ஜே இன்னின் உயர் மட்ட பாதுகாப்பு ஆலோசகர், இந்த வதந்திகளை பொருட்டாகக் கொள்ளாமல், கிங் ஜொங் உன் உயிருடனும் தேகாரோக்கியதுடனும் இருப்பதாகக் கூறினார்.

 

Share.
Leave A Reply