கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பி.யின் உடல் நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் வீடியோ வெளியிட்டுள்ளார்.

பிரபல பாடகர் எஸ்.பி.பி. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை குறித்து மருத்துவமனையும், அவரது மகனுமான எஸ்.பி.பி. சரண் தினமும் வீடியோ வெளியிட்டு வருகிறார்.

 

இன்று வெளியிட்டுள்ள வீடியோவில், அப்பாவின் நுரையிரலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பாடலுக்கு கால் அசைத்தார். எழுதவும் பாடவும் முயற்சி செய்தார்.

2 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்குக்குள் உடல் நிலை முழுவதுமாக குணமடையும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு வீடியோவில் எஸ்.பி.பி.சரண் கூறியிருக்கிறார்.

இதேவேளை, இன்று மாலை எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல் நிலை குறித்து தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

அதில், பின்னணி பாடகர் எஸ்.பி.பி.யின் உடல் நிலை சீராக உள்ளது. தொடர்ந்து எக்கோ மற்றும் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share.
Leave A Reply