வியட்நாம் நாட்டில் முதியவர் ஒருவர் 80 வருடங்களாக தலைமுடியை வெட்டாமல் வளர்த்துள்ளார்.
மெகாங் பகுதியை சேர்ந்த 92 வயதாகும் முதியவரான நிகியான் வான் சியன் என்பரே இவ்வாறு முடியை வளர்த்துள்ளார்.
கடந்த சுமார் 80 ஆண்டுகளாகவே முடியை வெட்டாமல் உள்ளார். இதனால் தலைமுடி கடினமாகி 16 அடி நீளத்துக்கு வளர்ந்துள்ளது.
மிக நீளமான அந்த முடியை சுருட்டி தனது தலையை சுற்றி கட்டியுள்ளார். தலைமுடியை வெட்டினால் இறந்து விடுவோம் என கருதியதாகவும், நான் எதையும் மாற்றுவதற்கும், அதை சீவுவதற்கு கூட நான் துணியவில்லை என முதியவர் தெரிவித்துள்ளார்.
“நான் முடியை மட்டும் வளர்த்துக் கொள்கிறேன், அதை ஒரு துணியால் மூடி, உலர்த்தி , சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருக்கிறேன்.
ஒன்பது சக்திகளையும் ஏழு கடவுள்களையும் வணங்கும் சியென், தனது தலைமுடியை வளர்ப்பதற்கான அழைப்பு என்று நம்புகிறார்.
பாடசாலையில் கல்வி கற்கும்போது முடியை வெட்டியுள்ளார். ஆனால் மூன்றாம் வகுப்புக்குப் பிறகு முடியை ஒருபோதும் வெட்டவோ, சீவவோ அல்லது மீண்டும் கழுவவோ கூடாது என்று முடிவு செய்த்தாக தெரிவித்துள்ளார்.