சிங்களவர்களை குறைத்து மதிப்பிட்ட சிலர் கடந்த காலத்தில் எதிர்கொண்ட விளைவுகளை நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரனும் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா நாடாளுமன்றத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த காலத்தில் சிங்களவர்களை குறைத்துமதிப்பிட்டவர்கள் இறுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பதை விக்னேஸ்வரன் மனதில் கொள்ளவேண்டும் என இன்று நாடாளுமன்றத்தில் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாட்டை பிளவுபடுத்தி தனிநாட்டை உருவாக்க முயன்ற விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கும் அந்த கதியேற்பட்டது என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
விக்னேஸ்வரன் ஒருபோதும் பிரபாகரன் ஆகமுடியாது என குறிப்பிட்டுள்ள அவர் விக்னேஸ்வரனுக்கு அதற்கான வயதுமில்லை காலமும் இல்லை என தெரிவித்துள்ளார்.
உங்களிடம் உள்ளது குறித்து மகிழ்ச்சி அடையுங்கள்,இந்த நாட்டில் சிங்களவர்களின் நிலையை குறைத்து மதிப்பிடவேண்டாம் அவ்வாறு குறைத்து மதிப்பிட்டால் அதற்கான விளைவுகளை நீங்கள் எதிர்கொள்வீர்கள்,மோசமான விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.