இந்தியாவில் மீண்டும் புதிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஒரு நாள் முன்னதாக இந்தியாவில் 75,000 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 77,266 புபுதிய கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள்.
இந்தியாவில் மொத்த கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 33,87,500 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் 1,057 பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61,529 ஆக அதிகரித்துள்ளது.
ஏறக்குறைய 34 இலட்சம் கொரோனா வைரஸ் தொற்றாளர்களில் 7,42,023 வைத்தியசாலையில் தங்கி சிககிச்சை பெற்று வருவதாகவும்,25,83,94 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் வியாழக்கிழமை 1,840 புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளது. இது இந்த மாதத்தில் இன்றுவரை நகரத்தின் மிக உயர்ந்த ஒற்றை நாள் அதிகரிப்பாகும்.
இது 1.67 இலட்சத்திற்கு மேல் உள்ளது, அதே நேரத்தில் இந்த நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 4,369 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 2,932 தொற்றாளர்களும், 11 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளது.
தெலுங்கானாவில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,17,415 ஆகவும், உயிரிழப்பு எண்ணிக்கை 799 ஆகவும் உள்ளது.
இதற்கிடையில், இந்தியா தற்போது செப்டம்பர் முதலாம் திகதி முதல் கட்டுப்பாடுகளை தளர்த்தும் திட்டம் 4 ஐ நோக்கி செல்கிறது, இதில் அரசாங்கம் அதிக தளர்வுகளை கொண்டு வந்து மெட்ரோ ரயில் சேவைகள், உணவகங்கள் மற்றும் மதுக்கடைகளை திறக்க வாய்ப்புள்ளது.