ஸ்காலாந்தில் அரியவகை செம்மறியாடு ஒன்று உலகின் மிக அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்தில் டெக்ஸல் வகை செம்மறியாடு ஒன்று அதன் உரிமையாளரால் சுமார் 380,500 பவுண்டுகளுக்கு (இந்திய மதிப்பில் ரூ 3.5 கோடி )விற்பனை செய்யப்பட்டுள்ளது.

டெக்ஸல் வகை செம்மறியாடுகளின் விற்பனை விழாவில் சார்லி போர்டன் என்பவரின்,ஆறு மாதமான செம்மறியாடுக்கு உலகின் மிக அதிகமான விலை கிடைத்துள்ளது.

இது இங்கிலாந்தில் மட்டுமின்றி உலக அளவில் சாதனை விலை என்றே கூறப்படுகிறது.இதுவரை டெக்ஸல் செம்மறியாடுக்கு அதிகபட்சமாக 2009 ஆம் ஆண்டு 230,000 பவுண்டுகள் விலை கிடைத்துள்ளதே சாதனையாக கருதப்பட்டது.

அந்த சாதனை வியாழனன்று முறியடிக்கப்பட்டுள்ளது. டெக்சல் செம்மறி ஆடுகள் நெதர்லாந்து கடற்கரையில் ஒரு சிறிய தீவில் இருந்து முதன் முதலில் உருவாகின.

தற்போது சாதனை விலைக்கு வாங்கப்பட்ட இந்த டெக்ஸல் செம்மறி ஆடானது மூன்று விவசாயிகளால் கூட்டாக வாங்கப்பட்டுள்ளது.

இனப்பெருக்கம் மூலம் தங்கள் முதலீட்டை திரும்பப் பெறுவார்கள் என்று மூன்று விவசாயிகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இளநரை சகஜம்தானே என அசால்டாக இருந்தவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் ஆய்வு முடிவுகள் ஒன்று வெளியாகியுள்ளது.

Share.
Leave A Reply