பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஐந்தாயிரத்திற்கும் மேல் தாண்டியுள்ள நிலையில், தலைநகர் பாரிசை ஐரோப்பிய நாடு சிவப்பு மண்டலமாக அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரான்சில் உலக சுகாதார அமைப்பின் தகவல் படி தற்போது வரை 233,293 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

30,411 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனால் நாட்டில் கொரோனா பரவலை தடுப்பதற்காக மேக்ரான் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

முகக்கவசம் கட்டாயம், சமூக இடைவெளி அவசியம் போன்ற பல புதிய விதிகளையும் கொண்டு வந்துள்ளது.

இதன் காரணமாக நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்தது போன்று தெரிந்த நிலையில், சமீப நாட்கள் நாட்டில் சில பகுதிகளில் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்தது.

இதனால் அந்த பகுதிகளில் எல்லாம் மக்கள் வெளியில் வந்தாலே முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது கடந்த 24 மணிநேரத்தில் 5,429 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

கிட்டத்தட்ட நான்கு மாதங்கள், அதாவது கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதிக்கு பின்னர், இரண்டாம் கட்ட அலையாக இந்த தொற்று பதிவாகியுள்ளது.

குறிப்பாக தலைநகர் பாரிஸ் மற்றும் இல் து பிரான்ஸில் நோயின் தொற்று தீவிரமாகி வருகிறது.

இதையடுத்து பாரிஸ் நகரத்தினைக் கொரோனா தொற்றின் சிவப்பு மண்டலமாகத் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெல்ஜியம் அறிவித்துள்ளது.

இங்கிலாந்து, பிரான்சிலிருந்து வருபவர்களை 14 நாள் தனிமைப்படுத்துவதாக அறிவித்த நிலையில் பெல்ஜியம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பிரான்சிலிருந்து, குறிப்பாக பாரிசில் இருந்து நாடு திரும்புபவர்களிற்கும், இங்கிருந்து பெல்ஜியம் செல்பவர்களுக்கும் கட்டாய கொரோனாப் பரிசோதனையும், தனிமைப்படுத்தலும் செய்யப்பபோவதாகவும் அறிவித்துள்ளது.

Share.
Leave A Reply