உலகின் முன்னணி காற்பந்து விளையாட்டு வீரரான ரொனால்டோ சொகுசு கார்கள் மீது அதிக நாட்டம் கொண்டவர்.

இவரிடம் ஏற்கனவே ரோல்ஸ் ரொய்ஸ், லம்போர்கினி, புகாட்டி வகை கார்கள் உள்ளதாகத் தகவல் தெரிவிக்கின்றன.

 

இந்நிலையில் தற்போது அவர் புகாட்டியின் லா வொய்யர் நொயர் என்ற உலகின் மிகவும் விலையுயர்ந்த காரை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மணிக்கு 380 கிலோமீற்றர் வேகத்தில் 2.4 செக்கன்களில் 60 கிலோ மீற்றர் வேகத்தை எட்டும் திறன் கொண்ட குறித்த காரின் பெறுமதியானது 8.5 மில்லியன் யூரோவாகும்.

 

கிறிஸ்டியானோ ரொனால்டோ ஸ்பெயினின் ரியல் மெட்ரிப் கிளப் அணியிலிருந்து விலகி தற்போது இத்தாலியின் ஜூவாண்டாஸ் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது,

Share.
Leave A Reply