யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடும் பெண், மாடிக் கட்டடத்திலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பளையைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் பணியாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 17ஆம் நோயாளர் விடுதியிலிருந்தே அந்தப் பெண் நிலத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

அந்த ஊழியர் தவறி வீழ்ந்தாரா அல்லது தற்கொலை செய்தாரா என்று விசாரணைகளின் பின்னரே தெரிய வரும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share.
Leave A Reply