தென் அமெரிக்கா : ஈகுவடோரில்(Ecuador )வசித்து வரும், 110 வயதான ஜூலியோ சீசர் மோரா(Julio Ceasar Mora ) மற்றும் அவரது மனைவியான 104 வயதான வால்ட்ராமினா குயிண்டேரோ(Waldramina Maclovia Quinteros) ஆகியோர் , உலகின் வயதான தம்பதியாக அங்கீகரிக்கப்பட்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர்.

 

இத் தம்பதியினர், கடந்த 1941ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துள்ளதாகவும் 79 வருடங்களாக இணைந்து வாழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இத் தம்பதிக்கு 4 மகன்/மகள்களும், 11 பேரன்களும், 25 கொள்ளு பேரன்களும், 1 பேரன் வயிற்று பேரனும் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இவர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு தடவை கூட விவாகரத்து குறித்து சிந்தித்ததில்லை என்றும் அன்பு, பரஸ்பர மரியாதை, நேர்மையான வேலை, சரியான கல்வி உள்ளிட்டவை ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளம் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share.
Leave A Reply