இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உயிரிழந்துள்ளதாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மூளையில் ஏற்பட்ட கட்டியின் அறுவை சிகிச்சைக்காக டில்லியில் உள்ள ராணுவ வைத்திய சாலைக்கு சென்றபோது அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தத நிலையில் அவர் இன்று மரணமடைந்துள்ளார்.
இது குறித்து அவரது மகன் அபிஜித் முகர்ஜி விடுத்துள்ள டுவிட்டர் பதிவில்,
கவலையான இதயத்துடன், ஆர்.ஆர் மருத்துவமனை வைத்தியர்கள் மற்றும் இந்தியா முழுவதிலும் உள்ளவர்களின் சிறந்த பிரார்த்தனைகளுக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. எனது தந்தை ஸ்ரீ பிரணாப் முகர்ஜி காலமானார் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க வேண்டும்! என தெரிவித்துள்ளார்.
இதே வேளை, கடந்த 10 ஆம் திகதி அவரின் மூளையில் இருந்த கட்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு கொரோனா தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
வென்டிலேட்டர், எக்மோ கருவிகள் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் இருப்பினும்,கோமா நிலைக்கு சென்ற அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்குச் சென்றதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்த இராணுவ வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அவரது மரணம் தொடர்பான தகவல் இன்று வெளிவந்துள்ளது.