இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 78,512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், 971 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தினமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி நோய்த்தொற்று எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 5 லட்சம் புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 லட்சத்தை கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பு 36,21,246 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 78,512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

971 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64,469 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27,74,802  ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 60868 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 7,81,975 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

உயிரிழப்பு 1.78 சதவீதமாக குறைந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 76.63 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Share.
Leave A Reply