உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷில் இருக்கும் லக்ஷ்மண் ஜூலா எனும் தொங்கு பாலம் ஒன்றின் மீது தன்னைத் தானே நிர்வாணமாகக் காணொளி எடுத்த பிரான்ஸ் நாட்டு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கங்கை நதி மீது அமைந்துள்ள லக்ஷ்மண் ஜூலா மற்றும் ராம் ஜூலா ஆகிய தொங்கு பாலங்கள் இந்துக்களால் புனிதமானதாகக் கருதப்படுகின்றன.

தற்போது பிணையில் வெளியே வந்துள்ள அந்தப் பெண் தனது நகைத் தொழிலை இணையத்தில் பிரபலப்படுத்துவதற்காக அவ்வாறு காணொளி எடுத்ததாக காவல்துறை விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.

அவர் லக்ஷ்மண் ஜூலா பாலம் மீது நிர்வாணமாக காணொளி எடுத்தது காவல்துறைக்கு தெரிந்த பின்னர் கடந்த வியாழனன்று கைது செய்யப்பட்டார்.

“இத்தகைய செயல்கள் பிரான்சில் வேண்டுமானால் தவறானதாகக் கருதப்படாமல் இருக்கலாம். ஆனால் ரிஷிகேஷ் ஒரு புனிதத்தலம்; இந்து கடவுள்கள் ராமர் அவரது சகோதரர் லக்ஷ்மண் மற்றும் சீதா ஆகியோர் கங்கையைக் கடந்த இடமாக லக்ஷ்மண் ஜூலா கருதப்படுகிறது,” என்று ஆர்.கே. சல்கானி எனும் காவல் அதிகாரி ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அந்தப் பெண் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் வரை அவருக்குச் சிறை தண்டனை விதிக்கப்படும்..

கைது செய்யப்பட்டுள்ள பெண் இதுவரை அதிகாரப்பூர்வமாக அடையாளப்படுத்தப்படவில்லை.

Share.
Leave A Reply