சாம்சங் நிறுவனத்தின் குறைந்த விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
கேலக்ஸி ஃபோல்டு
சாம்சங் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக கேலக்ஸி ஃபோல்டு மாடலை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது.
பின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பணிகளில் சாம்சங் ஈடுபட்டு வருகிறது. இதன் விளைவாக கேலக்ஸி இசட் ப்ளிப் மாடலும் வெளியிடப்பட்டது.
அந்த வரிசையில், சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி இசட் சீரிஸ் மாடலின் லைட் வெர்ஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
புதிய கேலக்ஸி இசட் ஃபோல்டு லைட் பெயர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எனினும், புதிய ஸ்மார்ட்போன் ஒன்று எஸ்எம்-எஃப்415எஃப் எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருகிறது.
பொதுவாக சாம்சங் மாடல்களில் எஃப் எனும் வார்த்தை மடிக்கக்கூடிய சாதனங்களை குறிப்பிடுகின்றன.
மேலும் இதில் குறைந்த இலக்க எண் வழங்கப்பட்டு இருப்பதால் இது கேலக்ஸி ஃபோல்டு சாதனங்களின் லோயர் எண்ட் மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இதன் விலையும் குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம்.
புதிய மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் சாம்சங் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதள பக்கங்களிலும் இடம்பெற்று இருக்கிறது.
அந்த வகையில், கேலக்ஸி இசட் ஃபோல்டு லைட் இந்திய வெளியீடு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
முன்னதாக கேலக்ஸி எஸ்10 மற்றும் நோட் 10 மாடல்களின் லைட் வெர்ஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
தற்போதைய தகவல்களின் படி புதிய ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் வழங்கப்படும் என்றும், இதில் 5ஜி, மிக மெல்லிய கிளாஸ் உள்ளிட்டவை வழங்கப்படாது என கூறப்படுகிறது.
இதன் விலை சாம்சங்கின் தற்போதைய மடிக்கக்கூடிய மாடல்களை விட குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.