தாய்வானில் 3 வயது ஒரு சிறுமி பட்டமொன்றின் வாலில் சிக்கியதால் காற்றில் பறந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனனும் இச்சிறுமி பின்ரன்பாதுகாப்பான முறையில் தரையிறங்கினாள்.
தாய்வானின் நன்லியோவா நகரில் கடற்கரை பகுதியில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுகிழமை ஏற்பாடு செய்யப்பட்ட பட்டம் விடும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த இச்சிறுமி நீண்ட வாலை கொண்ட பட்டம் ஒன்றில் சிக்கினாள்.
அப்போது பலமாக காற்று வீசியதால், அப்பட்டத்துடன் சேர்த்து மேற்படி சிறுமியும் காற்றில் இழுத்துச் செல்லப்பட்டாள்.
பட்டத்தின் வாலில் சிக்கிய சிறுமி பலமுறை வானில் சுழற்றியடிக்கப்பட்டாள். அங்கிருந்த பொதுமக்கள் பட்டத்தை நோக்கி; இழுப்பதற்கு முயற்சித்திருந்தனர். பட்டத்திலிருந்து மீள்வதற்கு சிறுமி பெரிதும் சிரமப்பட்டார்.
31 விநாடிகளின் (செக்கன்கள்) பின்னர் காற்று தணிந்தபோது அச்சிறுமி பட்டத்தின் வாலுடன் சேர்த்து கீழ்நோக்கி இறங்கினாள். அங்கிருந்தவர்கள் தூக்கி மீட்டனர்.
சின்சு நகர மேயல் லின் சீஹ் சியென் இது தொடர்பாக கூறுகையில், ‘இச்சிறுமியின் முகத்தில் உராய்வுக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இச்சம்பவத்தினால் அவள் மிகவும் பீதியடைந்துள்ளாள். வேறு பாதிப்புகள் ஏற்படவில்லை’ என்றார்.