உலகில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசியின் இறுதிகட்ட சோதனை அமெரிக்காவில் ஆரம்பமாகி உள்ளது.
AZD1222 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை பிரபல மருந்து நிறுவனமான ஆஸ்ட்ராஜெனகா தயாரிக்க உள்ளது.
அமெரிக்காவில் 80 இடங்களில் சுமார் 30 ஆயிரம் பேரிடம் இந்த தடுப்பூசியின் இறுதிக்கட்ட சோதனை நடக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
நேற்று வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பில் இந்த தகவலை உறுதி செய்த அதிபர் டிரம்ப், தடுப்பூசி கண்டுபிடிக்க வழக்கமாக பல ஆண்டுகள் தேவைப்படும் நிலையில், தமது நிர்வாகம் சில மாதங்களிலேயே அதை சாதித்து விட்டதாக கூறினார்.
அத்துடன் வரும் நவம்பர் 3 ஆம் திகதி நடக்க உள்ள அதிபர் தேர்தலுக்கு முன்னரே தடுப்பூசி பயன்பாட்டு வந்து விடும் எனவும் டிரம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.