விரைவில் தொடங்க இருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக பிரபல நடிகையிடம் அதிக தொகைக்கு பேச்சுவார்த்தை நடந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 4 – பிரபல நடிகையிடம் அதிக தொகைக்கு பேச்சுவார்த்தை
வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக இந்திய தொலைகாட்சிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியில் இதுவரை 13 சீசன்கள் முடிந்துள்ளது.
தமிழில் 3 சீசன்கள் முடிந்துள்ளது. இதனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ் பிக்பாஸின் 4-வது சீசன் நடக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்தது. சமீபத்தில் இதன் புரமோ வெளியாகி பிக்பாஸ் 4 சீசன் விரைவில் தொடங்க இருப்பதாக உறுதி செய்யப்பட்டது.
இதில் பங்கு பெறும் போட்டியாளர்கள் யார் யார் விபரம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’ பட கதாநாயகியான ஷில்பா மஞ்சுநாத் கலந்துக் கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதில் ஷில்பா மஞ்சுநாத் கலந்துக் கொள்வதற்கு சம்பளமாக ரூ.1 கோடி பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஜெமினி, வில்லன், வின்னர் போன்ற படங்களில் நடித்த கவர்ச்சி நடிகை கிரண் கலந்துக் கொள்ள இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது.