கொழும்பு – மட்டக்குளி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்துள்ளார்.
மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இன்று (02) காலை 8.40 மணியளவில் லொறி ஒன்று இரு முச்சக்கர வண்டிகளுடன் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக மட்டக்குளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவரான முச்சக்கர வண்டியின் சாரதியே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.