சோலிஜென் நகரில் ஒரு கட்டிடத்தில் ஐந்து சிறுவர்களின் சடலங்களை ஜேர்மன் பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.
மேற்கு ஜேர்மனியில் கொலோனிலிருந்து 20 மைல் தொலைவில் உள்ள நகரத்தில் உள்ள ஒரு தனியார் இல்லத்திலேயே இந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
இது தொடர்பான மேலதிக விபரங்கள்
ஒன்று முதல் எட்டு வயது வரையிலான ஐந்து குழந்தைகள் ஜேர்மனியில் “அவர்களின் தாய் அவர்களைக் கொன்று பின்னர் ரயிலின் முன் குதித்து தற்கொலைக்கு முயன்று” .பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
27 வயதான தாய் ரயில் முன் குதித்து ஐந்து குழந்தைகளையும் கொன்றதாக சந்தேகிக்கப்படுவதாகவும் ஆனால் பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
இறந்த ஐந்து குழந்தைகள் ஒன்று, இரண்டு, மூன்று, ஆறு மற்றும் எட்டு வயதுடையவர்கள் என்றும், 11 வயது சிறுவனுக்கு காயம் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும் விவரங்கள் இன்று பிற்பகுதியில் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர், ஆனால் குழந்தைகள் எப்படி இறந்தார்கள் என்பது இன்னும் தெரியவில்லை.