காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் கெசல்கமுவ ஒயா நீர் விழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள ஒடை ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்தனர்

பொகவந்தலா லெட்சுமி கீழ் பிரிவை 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான ஆறுமுகம் ரவிகுமார் என்பவரே சேர்ந்த. (04) இன்று மதியம் சடலமாக சடலம் மீட்கப்பட்டுள்ளது,

கெசல்கமுவ ஒயா பகுதிக்கு விறகு சேகரிக்க சென்ற ஒருவரினால் நீரில் சடலம் மிதந்து கொண்டிருப்பதை கண்டு பொதுமக்களுக்கு தகவல் வழங்கப்பட்ட பின் பொதுமக்களால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

சடலமாக மீட்கப்பட்ட குறித்த குடும்பஸ்த்தர் இன்று காலை 07.30 மணியளவில் வீட்டில் இருந்து தோட்டத்தில் உள்ள உப மின் உற்பத்தி நிலையத்திற்கு தொழிலுக்காக வந்தவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

மீட்கப்பட்ட சடலம் ஹட்டன் மாவட்ட நீதிமன்ற நீதவானினால் மரண விசாரனைகள் இடம்பெற்றவுடன் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதணைக்காக சடலம் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கபட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்,

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நோர்வுட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply