விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள வலையங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் தினகரன். இவரது மகன் கருப்பசாமி. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருநங்கையாக மாறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து தனது பெயரை ஹரினா (வயது 24) என மாற்றிக் கொண்டார். அதே கிராமத்தை சேர்ந்த ஹரினாவின் தாய்மாமன் கந்தசாமி மகன் கருப்பசாமி (வயது 27) டிரைவராக உள்ளார். இவர் ஹரினாவை காதலித்து வந்துள்ளார்.

கருப்பசாமி திருநங்கை ஹரினாவை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் ஹரினாவை திருமணம் செய்வதில் கருப்பசாமி உறுதியாக இருந்தார்.

இறுதியில் அவர்களுடைய பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையெடுத்து இருவீட்டாரின் சம்மதத்தோடு காரியாபட்டி சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் கருப்பசாமி – ஹரினா ஆகிய இருவருக்கும் வெள்ளிகிழமை (செப்டம்பர் 4ஆம் தேதி) காலை திருமணம் நடைப்பெற்றது.

இந்த திருமணத்தை திருநங்கைகள் அனைவரும் சேர்ந்து நடத்தினர். மணமகளுக்கு தேவையான சீர்வரிசை பொருட்கள் திருநங்கைகள் சார்பாக வழங்கப்பட்டன.

Share.
Leave A Reply