நி்யூயார்க்
வடகொரியாவில் பிறந்த யியோன்மி பார்க் என்பவரே தற்போது, தமக்கும் தமது குடும்பத்தாருக்கும் ஏற்பட்ட கொடுமைகளை வெளிப்படுத்தியதுடன், வடகொரியாவில் வசிக்கும் அப்பாவி மக்களின் நிலையையும் வெளிச்சமிட்டு காட்டியுள்ளார்.
வடகொரியாவில் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைக்கும் பெருவாரியான மக்கள் சத்தான உணவுக்காக பூச்சிகளையே சாப்பிட்டு வருவதாக கூறும் பார்க்,வடகொரியாவில் இருந்து தமது 13-வது வயதில் வெளியேறும் வரை தாமும் பூச்சிகளை சாப்பிட்டதாக கூறுகிறார்.
பொதுவாக சேரிப்பகுதிகள் போன்றே வடகொரிய தெருக்கள் காணப்படுவதாக கூறும் பார்க், தெருக்களில் கேட்பாரற்று சடலங்கள் கிடப்பதையும் தாம் அந்த சிறு வயதில் காண நேர்ந்ததை நினைவு கூர்ந்துள்ளார்.
பள்ளிகளில் நட்பு அல்லது காதல் என்பதையே காண முடியாது என கூறும் அவர், மின்சாரம் கூட வடகொரியாவில் பொதுவல்ல என தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வின்படி வடகொரியாவில் மொத்த மக்கள் தொகையில் 43 சதவீதம் நாளுக்கு ஒரு வேளை உணவருந்துபவர்கள் என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.
பார்க் தமது தாயாருடன் கடந்த 2007 ஆம் ஆண்டு வடகொரியாவில் இருந்து சீனர் ஒருவரை நம்பி வெளியேறியுள்ளனர்.