ஜெர்மனியின் சோளிங்கன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தாய் ஒருவர் தனது ஐந்து குழந்தைகளுக்கு விஷம் கொன்ற சம்பவம் பெரும் அதிச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
தாயொருவர் தனது பிள்ளைகளுக்கு விசம் கொடுத்து விட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து விரைந்து சென்றவர்கள் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க முயற்சித்தபோதும் குழந்தைகள் ஏற்கனவே உயிரிழந்தமை தெரிய வந்துள்ளது.
இதனிடையே 5 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தாய் தனது மூத்த மகனான மார்ஷலை கூட்டிக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
செல்லும் வழியில் Dusseldorf எனுமிடத்தில் குழந்தைகளின் தாயான கிரிஸ்டினா இறங்கி விட்டு மகனிடம் பாட்டி வீட்டிற்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அதன் பின்னர் ரயில் தண்டவாளத்தில் குதித்துள்ளார்.
ஆனால் உயிருக்கு ஆபத்து இல்லாமல் பலத்தை பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் கிறிஸ்டினா குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
மூன்று முறை திருமணம் செய்துகொண்ட கிறிஸ்டினாவுக்கு அனைத்து திருமணங்களும் தோல்வியிலேயே முடிந்துள்ளன.
மூன்றாவது கணவர் கிறிஸ்டினாவை விட்டு ஒரு வருடத்திற்கு முன்பு பிரிந்து சென்றுள்ளார்.
அவரது ஆறு குழந்தைகளில் நான்கு பேர் மூன்றாவது கணவருக்குப் பிறந்தவர்கள்.
இதனால் விரக்தியடைந்த கிறிஸ்டினா குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.