புனே தத்தாவாடி பகுதியை சேர்ந்தவர் நாகப்பா(வயது37). இவரது மனைவி பசம்மா கும்பார்(30). இவர்களுக்கு 4 வயதில் மகள் உள்ளாள்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த நாகப்பாவுக்கும் அவரது மனைவிக்கும் ஏதோ பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

 

இதனால் அவரது மனைவி பசம்மா கும்பார் தனது மகளை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி வாகேவாடி பஸ் நிறுத்தத்திற்கு புறப்பட்டார்.

இந்தநிலையில் அங்குள்ள சங்கம் மேம்பாலத்தில் அவர் மகளுடன் நடந்து சென்றபோது, அங்கு வந்த நாகப்பா மனைவியிடம் சமரசம் பேசினார்.

அப்போது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் கடும் ஆத்திரம் அடைந்த நாகப்பா மனைவி என்றும் பாராமல் சுமார் 45 அடி உயர மேம்பாலத்தில் இருந்து பசம்மா கும்மாரை கீழே தள்ளிவிட்டார்.

இதில், அவர் சேற்றில் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார். மேலும் கீழே விழுந்ததில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

வலியால் அலறி துடித்த அவரை தீயணைப்பு படையினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து பசம்மா கும்பார் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து நாகப்பாவை கைது செய்தனர்.

கணவனே மனைவியை மேம்பாலத்தில் இருந்து கீழே தள்ளி விட்டு கொலை செய்ய முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Share.
Leave A Reply