இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 90 ஆயிரத்து 600 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இது ஒரேநாளில் உலக நாடுகளில் முதன்முறையாக பதிவான அதிகபட்ச கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கையாகும்.

இந்த வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் நேற்று மட்டும் ஆயிரத்து 44 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, இந்தியாவில் தொடர்ந்து கொரோனா தொற்று தீவிரமாக அதிகரித்து வருவதால், தொற்று உறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாம் நிலைக்கு வரவுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் இதுவரை 41 இலட்சத்து 10 ஆயிரத்து 839 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

அத்துடன், அங்கு இதுவரையில் கொரோனா தொற்றினால் 70 ஆயிரத்து 679 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, தமிழகத்தில் நாளைய தினம் முதல் மாவட்டங்களுக்கு இடையிலான பொதுப்போக்குவரத்தினை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த பொதுப்போக்குவரத்து முன்னெடுக்கப்படவுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவித்துள்ளன.

Share.
Leave A Reply