மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலை, ஆறுமுகத்தான்குடியிருப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்ற இந்த விபத்தில், கொம்மாதுறை கலைவாணி வீதியைச் சேர்ந்த கிட்ணபிள்ளை குபேந்திரன் (வயது 46) என்பவரே உயிரிழந்துள்ளார்.

ஆறுமுகத்தான் குடியிருப்பிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் ஆராதனையில் பங்குகொண்டு தனது சைக்கிளில் பிரதான வீதியூடாக வீடு திரும்பும்போது, பின்னால் வந்த டிப்பர் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலம் ஏறாவூர் ஆதரார வைத்தியசாலையில் உடற்கூற்றாய்வுப் பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பாக, டிப்பர் வண்டியின் சாரதியை ஏறாவூர்ப் பொலிஸார் கைதுசெய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply