உலக அளவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.70 கோடியாக உயர்ந்துள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 2.70-கோடி பேர் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வைரஸ் தாக்குதலுக்கு 8.82-லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 1.91-கோடி பேர் குணம் அடைந்துள்ளனர். அமெரிக்காவில் 64.29- லட்சம் பேர் இதுவரை கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பிரேசிலில் 41.23-லட்சம் பேரும் ரஷ்யாவில் 10.20- லட்சம் பேரும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

Share.
Leave A Reply