வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பேரூந்து சாலியவேவா பகுதியில் விபத்துக்கு உள்ளானதில் 10 க்கு மேற்பட்ட பயணிகள் சிறுகாயங்களுக்கு உள்ளாயியுள்ளனர்.

நேற்று (06) மதியம் வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் சொகுசு பேரூந்து வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று பயணத்தினை ஆரம்பித்துள்ளது.

அனுராதபுரம் – புத்தளம் பாதை ஊடாக கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சமயத்தில் மாலை 4.30 மணி அளவில் சாலியவேவா பாடசாலைக்கு அருகே பேரூந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளனதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பின்னர் பேரூந்து பயணித்த பயணிகள் அனைவரும் அவசர பாதை ஊடாக பேரூந்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இவ்விபத்தில் 10 க்கு மேற்பட்ட பயணிகள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மழை காரணமாகவே இவ் விபத்து இடம்பெற்றதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply