ரயில் முகக்கவசம் அணியாமல் பயணித்த நபரொருவர், பொலிஸாருடன் முரண்பட்டதையடுத்து, அந்நபரின் முகத்தில்  மிளகுத் தெளிப்பான (பெப்பர் ஸ்ப்றே) தெளித்து பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர். இங்கிலாந்தின் லிவர்பூல் பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஐந்து பிள்ளைகளின் தந்தையான அன்டனி பால்ட்வின் (34) என்ற நபரே கைது செய்யப்பட்டுள்ளவராவார். இந்த கைது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தான் பதற்றத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதால் பொதுபோக்குவரத்தின்போது தான் முக்கவசம் அணிவதிலிருந்து தான் விலக்களிக்கப்படுவதாக பால்ட்வின் கூறியுள்ளார்.

எனினும், பொலிஸார் அவரை முகக்கவசம் அணிய அறிவுறுத்தியபோது, இருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் தனது தந்தை இழந்ததையடுத்து, கடுமையான பதற்றத்தினால் அவதிப்பட்டுவருவதாக பால்ட்வின் கூறுகிறார்.

பொலிஸ் வாகனத்தில் இருந்தபோது, அதிர்ச்சிக்கு உள்ளானதாகவும், தான் இந்த பதற்றத்துக்காக சிகிச்சை பெறுவதாகவும் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தின் பின்னர் 3 மணிநேரம் வைத்தியசாலையில் சிகி;ச்சை பெற்றதாகவும், கைதின் போதான குழப்பத்தில் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதேவேளை, கடந்த ஜுன் முதல் இங்கிலாந்தில் பொதுப்போக்குவரத்தின்போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனினும், பதற்றம் மற்றும் அதிர்ச்சி கோளாறு, மனஇறுக்கம், சுவாச கோளாறு கொண்டவராகவோ, பார்வை குறைபாடு அல்லது வாயசைவை வைத்து புரிந்துகொள்ளுபவர்கள் (கேட்டல் குறைபாடு) உடன் இருந்தாலோ முகக்கவசம் அணிவதில் இருந்து அங்கு விளக்களிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அச்சுறுத்தும் நடத்தை மற்றும் பொலிஸாரை தாக்கியதற்காக பால்ட்வின் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

Share.
Leave A Reply