ஸ்பெய்னில், கொரோனா தொற்றாளர் என உறுதிசெய்யப்பட்ட யுவதி ஒருவர் விதிகளை மீறும்வகையில் கடலில் அலைச்சறுக்களலில் ஈடுபட்டிருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்பெய்னின், சென். செபஸ்டியன் நகரிலுள்ள லா கொன்சா கடற்கரையில் உயிர்காப்பு படையில் இப்பெண் பணியாற்றிவருகிறார்.
இந்நிலையில், அவர் லா சூரியோலா கடற்கரைக்கு அலைச்சறுக்கலில் ஈடுபடசென்றபோது, அவரின் நண்பர் ஒருவர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து, அங்குவிரைந்த பொலிஸார் இந்த யுவதியை கடலில் இருந்து வெளியேற்றி கைதுசெய்ததுடன் முகக்கவசம் அணியுமாறு உத்தரவிட்டனர். கடலில் இருந்து கரைக்கு வருமாறு பொலிஸார் அறிவுறுத்தியபோது, அதனை புறக்கணிந்து அலைசறுக்கலில் ஈடுபட்டுள்ளார்.
கடுமையான தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமைக்காக இப்பெண் 5,500 யூரோ (சுமார் 12 இலட்சம் ரூபா) அபராதத்தை செலுத்த நேரிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
VIDEO: A woman who went surfing when she should have been self-isolating after testing positive for Covid-19 is arrested on a beach in San Sebastian in northern Spain, according to police and as seen in Twitter footage of her arrest pic.twitter.com/xVLwupOZgT
— AFP news agency (@AFP) September 10, 2020