யாழ் பண்டத்தரிப்பு பகுதியில் 2 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் நேற்று இரவு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டத்தரிப்பு பகுதியில் 2 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் நேற்று இரவு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த பெண் தொடர்ச்சியாக ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட நிலையில் அவரது வீட்டை சுற்றிவளைத்து பொலிஸார் அவரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து 2 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை மீட்டுள்ளனர்.

Share.
Leave A Reply