முகக்கவசத்தை சரியான முறையில் அணிவது எப்படி என யுவதியொருவருக்கு அன்னப்பறவை ஒன்று கோபத்துடன் கற்பிக்கும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் பலரை கவர்ந்துள்ளது.
கொரோனா தொற்றுபரவல் காரணமாக கடந்த சில காலமாக முகக்கவசம் ஒரு முக்கிய பொருளாக மாறியுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தலுக்கமைய, வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணியுமாறு பலநாடுகள் தொடர்ந்தும் வழியுறுத்துகிறது.
இந்நிலையில், பிரான்ஸிலுள்ள பூங்கா ஒன்றுக்கு சென்ற யுவதி ஒருவர் தான் அணிந்திருந்த முகக்கவசத்தை முகத்திலிருந்து நீக்கி தாடையில் அணிந்தபடி அமர்ந்தவாறு அங்கிருந்த அன்னம் ஒன்றை அணுகினார்.
அதன்போது, திடீரென குறித்த அன்னம் தனது அலகினால் அந்த யுவதியின் முகக்கவசத்தை பற்றி, மூக்கு வாயை மறைக்கும் படியை அதனை அணிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த யுவதி முகக்கவசத்தை அகற்றியபடி பின்னோக்கி சென்றார்.