இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் தந்தையும் மகனும் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் நேற்றிரவு மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உணவகம் ஒன்றில் வைத்து இரு நபர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்ற போது அது குழு மோதலாக மாறியுள்ளது.
குறித்த மோதலில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் காயமடைந்த மகன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையிலும் தலைக் கவசத்தால் தாக்கப்பட்ட நிலையில் தந்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.