தான் பெற்ற 40 நாட்களான குழந்தையை  கழுத்தை நெரித்து கொலை செய்த தாயை எதிர்வரும் 31ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சீ.றிஸவான் நேற்று  (17) மாலை உத்தரவிட்டார்.

 

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வன்னியார் வீதியில் உள்ள வீடு ஒன்றின் கிணற்றில் இருந்து 40 நாட்களான சிசு ஒன்று உயிரிழந்த நிலையில் நேற்று முந்தினம் இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

பிறந்து நாற்பது நாட்களான பெண் பிள்ளையான கோஷனி என்ற சிசுவே இவ்வாறு சடலமாக மீட்டகப்பட்டுள்ளது.

இதனையடுத்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ஹெட்டியாராச்சியின் வழிகாட்டலில் பொலிஸ்; நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசார் குறித்த குழந்தையின் தாயைக் கைது செய்து  விசாரணைகளை மேற்கொண்டபோது தானே தனது குழந்தையை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது 14 நாட்கள் விளக்கமறியல்  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்.மட்டக்களப்பு தலைமைய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Share.
Leave A Reply